வயிற்றில் குட்டியுடன் இறந்த காட்டு யானை: வனத்துறை விசாரனை

ஞாயிறு, 29 மே 2016 (04:32 IST)
கூடலூர் அருகே கர்பமாக இருந்த காட்டு யானை மர்மமாக உயிரிழந்தது, இதுகுறித்து வனத்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர். 
 

 

 
கூடலூர் அருகே வெட்டுக்காடு, பளியன்குடி மற்றும் எல் கரட்டு பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைக் கூட்டம் விவசாய பயிர்களையும், விளை பொருள்களையும் சேதப்படுத்தி வந்தது. அதோடு கடந்த சில நாட்களுக்கு முன் இதே பகுதியில், தோட்டக் காவலாளி வெள்ளையத்தேவன் காட்டு யானை தாக்கி இறந்தார்.
 
இந்நிலையில், சனிக்கிழமை வெட்டுக்காடு அருகே கப்பா மடை பீட் பகுதியில் மர்மமான முறையில் ஒரு பெண் யானை உயிரிழந்து கிடந்தது. தகவலறிந்ததும் ரேஞ்சர் போஸ் தலைமையிலான வனத் துறையினர் அங்கு சென்று யானையின் உடலை கைப்பற்றினர். 
 
இதன் பின்னர், அதை பிரேத பரிசோதனை செய்த அரசு கால்நடை மருத்துவர், யானைக்கு எந்த நோயும் தாக்கவில்லை என்றும், அந்த பெண் யானையின் வயிற்றில் குட்டி இருந்தது என்று தெரிவித்தார். 
 
இதையடுத்து வேலியில் மின்சாரம் வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்தில் வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்