ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2200.. திருக்கார்த்திகையை முன்னிட்டு ஜெட் வேகத்தில் உயர்ந்த விலை..!

ஞாயிறு, 26 நவம்பர் 2023 (12:07 IST)
இன்று திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு ஒரு கிலோ மல்லிகை பூ  2,200 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
விசேஷ நாட்களில் பூக்களின் விலை கடும் உயர்வு ஆக இருக்கும் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் திருக்கார்த்திகை தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பூக்களின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது 
 
மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் பூக்களின் விலை கிடு கிடு என உயர்ந்துள்ளதாகவும் நேற்று ஒரு கிலோ 1800 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ இன்று 400 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 2200 என விற்பனை ஆகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
அதேபோல் நேற்று ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்பனையான கனகாம்பரம் இன்று 1200 ரூபாய்க்கு விற்பனை ஆவதாகவும்  நேற்று  800 ரூபாய்க்கு விற்பனையான முல்லை, பிச்சி பூக்களும் இன்று ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருவதாகவும் கூறப்படுகிறது. கார்த்திகை தீபத்தை ஒட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்