மயிலாடும்பாறை அருகே உள்ள சுக்கான் ஓடையில் ஏற்பட்ட வெள்ளம், அதே பகுதியில் உள்ள பெரியகுளம் ஓடையில் திருப்பி விடப்பட்டது. அதிகமான தண்ணீர் வந்த காரணத்தினால் பெரியகுளம் கண்மாய் நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்ந்தது.
கண்மாயிலிருந்து மறுகால் பாய்ந்த தண்ணீர் மயிலாடும்பாறை கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனை அடுத்து அந்தப் பகுதியில் வசித்து வந்த மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த வெள்ளத்தினால் அந்தப் பகுதியில் இருந்த ஒரு மண் வீடு இடிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் வெள்ளநீர் புகுந்த பகுதியில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பொதுமக்களை அப்புறப்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.