ஓடிடியில் திரைப்படங்கள் ரிலீஸ் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ யோசனை!

புதன், 10 பிப்ரவரி 2021 (21:35 IST)
புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ஒரு சில நாட்களில் ஓடிடியில்  வெளியாகி வருவதும், பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வருவதுமான வழக்கம் அதிகரித்து வருகிறது 
 
இந்த நிலையில் திரைப்படங்களை ஓடிடியில் வெளியாவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த நிலையில் புதிய திரைப்படங்களை முதலில் திரையரங்குகளிலும் அதன் பின்னர் சில காலக்கெடு நிர்ணயித்து ஓடிடியில் வெளியிடுமாறு திரைப்படத்துறைக்கு தமிழக அரசு ஆலோசனை தெரிவித்துள்ளது 
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் ஓடிடியில் திரைப்படங்களை நேரடியாக வெளியிடுவது நல்லது இல்லை என்றும் முதலில் திரைப்படங்களை திரையரங்குகளில் தான் வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்தார் 
 
அதன் பின்னர் ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்கள் கழித்து ஓடிடியில் வெளியிடலாம் என்று அவர் ஆலோசனை கூறியுள்ளார். அமைச்சரின் இந்த ஆலோசனையை திரைப்பட தயாரிப்பாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்