அந்த கிடங்கில் ஏராளமான தொழிலாளர்கள் இருப்பதால், அவர்களை மீட்கும் பணியில் போலீசாரும், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
நேற்று சிவகாசியில் உள்ள பட்டாசு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு, 9 பேர் பலியாகினர். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், இன்று கோவையில் உள்ள பட்டாசு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ள விவகாரம், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக எழுந்த புகை, அருகிலிருந்த ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்திற்கும் பரவியது. அங்கிருந்து 6 பேருக்கும் மேல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.