ஹெல்மெட் போடாத ஆட்டோ டிரைவருக்கு அபராதம்: கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவில்லையா?

திங்கள், 19 அக்டோபர் 2020 (16:39 IST)
இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் போடவில்லை என்றால் தான் அபராதம் விதிக்கப்படும் என்ற நிலையில் ஆட்டோவில் சென்ற டிரைவர் ஒருவருக்கு ஹெல்மெட் போடவில்லை என்று அபராதம் விதித்த திருச்சி போலீசாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
திருச்சியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் கடந்த பத்து வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் திருச்சி தில்லைநகரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சமீபத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென திருச்சி மாநகர காவல் துறையிடம் இருந்து மெசேஜ் ஒன்று அவரது செல்போனுக்கு வந்தது
 
அந்த மெசேஜை ஆட்டோ டிரைவர் ஓப்பன் செய்து பார்த்தபோது ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. என்ன காரணத்துக்காக அபராதம் என்று அவர் பார்த்தபோது அவர் ஹெல்மெட் போடாததால் அபராதம் விதிக்கப்பட்டது என தெரியவந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார் 
 
இதுகுறித்து அவர் கூறும்போது திருச்சியில் உள்ள மாநகராட்சி பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்களுக்கு, அவர்களுக்கே தெரியாமல் வண்டி எண்ணை குறித்து வைத்து போலீசார் அபராதம் வசூலித்து வருகின்றனர். ஆட்டோ டிரைவர்களுக்கு எதுக்கு ஹெல்மெட் என்று எனக்கு புரியவே இல்லை
 
ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பால் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் நிலையில் இதுபோன்று அபராதமும் விதித்து உள்ளதால் நாங்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். ஆட்டோ டிரைவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டுமா என்பதை தமிழக முதல்வரிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் தான் விளக்கம் கேட்க போவதாக அவர் தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்