தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு..! ரூ.5 முதல் ரூ.20 வரை அதிகரிப்பு.!

Senthil Velan

சனி, 23 மார்ச் 2024 (11:42 IST)
தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், புதிய கட்டண நடைமுறை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. 
 
அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 
 
ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும், மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ. 100 முதல் ரூ.400 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ALSO READ: வாக்கிங் சென்று வாக்கு சேகரித்த முதல்வர்..! செல்ஃபி எடுத்து மகிழ்ந்த மக்கள்..!!
 
நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தற்போது ஐந்து சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்