சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வண்டிப்பாளையம் என்ற இடத்தில் சைக்கிளில் சென்ற விவசாயி சக்திவேல் என்பவர் மீது கார் ஒன்று மோதியது.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய கார், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு சொந்தமானது என்றும், அந்த காரில் டிரைவர் மட்டும்தான் வந்தார் என்றும், வைகோ வரவில்லை என்றும் தெரிய வந்தது.