பிரபல செய்தி வாசிப்பாளர் மரணம்.! எமனாக வந்த புற்றுநோய்..!!

Senthil Velan

வெள்ளி, 26 ஜூலை 2024 (15:16 IST)
தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா உடல்நல குறைவால் காலமானார்.
 
கள்ளக்குறிச்சியை சேர்ந்த சௌந்தர்யா செய்தி துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் பல்வேறு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.  பாலிமர், சத்யம், மற்றும் நியூஸ் தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளில் பணிபுரிந்த அவர், செய்தி வாசிக்கும்போது தனது உச்சரிப்பால் மிகவும் பிரபலமானார். 
 
கடந்த ஆண்டு சௌந்தர்யாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை மேற்கொண்டார். இருப்பினும் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் அவருக்கு புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் புற்றுநோய் 4 நிலை கண்டறியப்பட்டது. 
 
இதனால் அதிர்ச்சி அடைந்த சௌந்தர்யாவிற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆறுதல் தெரிவித்தனர். மீண்டும் செய்தி துறையில் பணியாற்றனும் என்ற நம்பிக்கையை சௌந்தர்யாவிற்கு அளித்தனர். இரத்த புற்றுநோய்க்கு பல லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து தொலைக்காட்சி மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்கள் பண உதவி செய்தனர். தமிழக அரசிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சௌந்தர்யா சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தார். 
 
கடந்த ஓராண்டாக சிகிச்சை பெற்று வந்த சௌந்தர்யாவிற்கு இரத்த புற்றுநோய் பாதிப்பு முற்றிய நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தொலைக்காட்சி  ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது உடல் பத்திரிகையாளர்களின் அஞ்சலிக்காக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

ALSO READ: எடப்பாடியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்.! மன்னிப்பு கேட்ட இபிஎஸ்.! எதற்காக தெரியுமா?

மாலை 5 மணி வரை சௌந்தர்யாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், பத்திரிகையாளர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதி சடங்கு சொந்த ஊரான கள்ளக்குறிச்சியில் நாளை நடைபெறவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்