தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக திண்டுக்கல், சிவகங்கை, நாகர்கோவில், தஞ்சாவூர், நெல்லை ஆகிய மாவட்ட நீதிமன்றங்களில் விஜயகாந்த் மீது அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
தன் மீது போடப்பட்ட வழக்குள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்டது என்றும், எனவே அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும், இதனால் மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி 5 மாவட்டங்களில் விஜயகாந்த் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க தடை விதித்ததோடு, மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட்டார்.