இந்த கொலை, கொள்ள சம்பவத்தில் 11 பேர் குற்றவாளிகள் என கூறப்பட்டது. அதில் ஜெயலலிதாவின் முன்னாள் கார்டிரைவர் கனகராஜ் விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அவரது கூடாளி சயன் விபத்தில் சிக்கி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 9 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அவர்களில் சிலர் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சில மாவட்ட செயலாளர்களுடன் செல்போனில் தொடர்ந்து பேசி வந்தது தெரியவந்துள்ளது. அந்த முன்னாள் அமைச்சரின் ஏற்பாட்டில் தான் அந்த 9 பேரில் இருவரான ஜதீன் ஜாய் மற்றும் ஜம்சீர் அலி ஆகியோர் முன்னர் கொடநாட்டு பங்களாவில் கட்டில், மெத்தை, ஃபர்னிச்சர் போன்றவைகளை அமைக்கும் பணிக்கு சென்றிருந்தனர்.
அதுமட்டுமல்லாமல் இந்த கொலை சம்பவம் நடக்கும் முன்பாகவே கார் விபத்தில் சிக்கி உயிரழந்த கனகராஜும், தற்போது மருத்துவமனையில் உள்ள சயனும் முக்கியமான அரசியல் புள்ளிகளுடன் சிலருடன் போனில் பேசி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் சென்னையை சேர்ந்த அந்த அரசியல் புள்ளி இதில் சிக்கி விசாரணையை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.