இந்த புகாரை அடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அறிவழகன் மனைவி கூறியதுபோல் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசாரின் சந்தேகம் அறிவழகன் மனைவி மீது திரும்பியது. உடனடியாக சுரேகாவிடம் கடும் விசாரணை நடத்தினர். அப்போது சுரேகாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்ற வாலிபருக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சூர்யாவை கைது செய்த போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில், அறிவழகனுக்கும் சுரேகாவுக்கும் திருமணம் நடந்து 4 ஆண்டுகள் ஆகின்றன.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சூர்யாவுக்கும் சுரேகாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதனை கேள்விபட்ட அறிவழகன் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அதனை கண்டுகொள்ளாத சுரேகா சுர்யாவுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி நேற்று முந்தினம் இரவு அறிவழகன் வீட்டிற்கு சென்றார் சூர்யா. அப்போது உறங்கிகொண்டிருந்த அறிவழகனை சூர்யாவும் சுரேகாவும் சேர்ந்து அவரை தலையணையால அமுக்கியும் ,கத்தியால் குத்தியும் கொலை செய்தது தெரியவந்தது.