11 வயது சிறுமிக்கு 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை.. சென்னையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran

செவ்வாய், 28 மே 2024 (12:32 IST)
சென்னையில் கடந்த ஆறு மாதமாக 11 வயதில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ள நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை  வில்லிவாக்கத்தில் 11 வயது சிறுமி கடந்த ஆறு மாதங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளிவந்த உண்மை தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது 
 
சிறுமியின் உடல் நிலை மோசமடைந்ததால் இது குறித்து விசாரித்த போது தான் இந்த உண்மை வெளிவந்ததாகவும் இதனை அடுத்து சிறுமியின் பாட்டி வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிகிறது.
 
இந்த புகாரின் அடிப்படையில் நான்கு பேரை பிடித்து மகளிர் காவல் துறையினர் விசாரித்து வருவதாகவும் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது 
 
6 மாதங்களாக நான்கு பேர் சேர்ந்து 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்