கொடைக்கானலில் யானை தாக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதை கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியல் ஈடுப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் வன விலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன். அதில் குறிப்பாக யானை அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் வந்து பயிர்களையும், விவசாய நிலங்கலையும் செதப்படுத்துவது வழக்கமான நிகழ்வு.
இதைத்தொடர்ந்து கொடைக்கானல் அஞ்சுவீடு பகுதியில் கடந்த ஒரு மாதமாக யானை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்து வந்துள்ளது. ஆனால் அதனை விரட்டுவதற்கு வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பேத்துப்பாறை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பிச்சையம்மாள்(60) என்னும் பெண்ணை அந்த யானை தாக்கியத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து பிச்சையம்மாளின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்படனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பிச்சையம்மாளின் குடும்பத்துக்கு ரூ:50 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று வனதுறை அதிகாரி தெரிவித்தார். அதனால் அவர்கள் குடும்பத்தினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும் இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.