மின்சாரம் தாக்கி இறந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி: ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள், 11 ஜனவரி 2016 (08:47 IST)
மின்சாரம் தாக்கி இறந்தவரின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


 

 
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
 
தேனி மாவட்டம், தேனி நகர 11 ஆவது வார்டை சேர்ந்த வி.சரவணன் மின் இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அகால மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத்துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
 
அகால மரணமடைந்த சரவணனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
 
மேலும் அவரது குடும்பத்திற்கு அதிமுக சார்பில் குடும்ப நல நிதியுதவியாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்