இந்த நிலையில் தற்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாடகைக்கு விட மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஃபிளை என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள மெட்ரோ நிர்வாகம் முதல்கட்டமாக சென்னையில் உள்ள கிண்டி, ஆலந்தூர், நந்தனம் மற்றும் பரங்கிமலை ஆகிய நான்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த ஸ்கூட்டர்களை வாடகைக்கு விட உள்ளது
ஐந்து ரூபாய்க்கு இந்த ஸ்கூட்டர்களை புக்கிங் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு ரூபாய் மட்டுமே கட்டணம். இந்த நான்கு ரயில்வே நிலையங்களில் எந்த இடத்திலும் ஸ்கூட்டர்களை எடுத்து, எந்த இடத்திலும் டிராப் செய்து கொள்ளலாம்என்பது குறிப்பிடத்தக்கது
இந்த வாகனத்தை ஸ்டார்ட் செய்ய சாவி எதுவும் தேவையில்லை. செயலி மூலமே ஸ்டார்ட் செய்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வசதியால் பயணிகளுக்கு பெரும் பயன் கிடைக்கும் என்றும் இந்த வசதிக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து மற்ற மெட்ரோ நிலையங்களிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது