அதிமுக இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ளதால், இரு அணிகளுக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது என சின்னத்தை தற்காலிகமாக முடக்கியது தேர்தல் ஆணையம். இரண்டு அணிகளும் புதிய சின்னத்தை பெற இன்று தேர்தல் ஆணையத்தை அனுகியது.
இறுதியில் ஓபிஎஸ் தரப்பிற்கு இரட்டை மின்கம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டது. சசிகலா அணி இரட்டை மின்கம்பம் சின்னத்துடன், ஆட்டோ சின்னத்தையும், தொப்பி சின்னத்தையும் பரிந்துரை செய்தது. இதனையடுத்து அவர்களுக்கு ஆட்டோ சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.
ஆனால் சசிகலா அணி பலக்கட்ட ஆலோசனைக்கு பின்னர் ஆட்டோ சின்னம் வேண்டாம் என கூறி தொப்பி சின்னத்தை பெற்றுள்ளனர். ஓபிஎஸ் அணி அஇஅதிமுக புரட்சித்தலைவி அம்மா என்ற பெயரையும், சசிகலா அணி அஇஅதிமுக அம்மா என்ற பெயரிலும் களம் இறங்குகிறது.