இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியின்றி மற்றும் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் கடந்த பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் இன்று மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இதனிடையே இந்த மறைமுகத் தேர்தலுக்கான வழிகாட்டுதல்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.