ஓபிஎஸ் கூடாரத்தை கலைக்க ஆறுகுட்டியிடம் டாஸ்க் கொடுத்த எடப்பாடி!
செவ்வாய், 25 ஜூலை 2017 (13:04 IST)
சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கிய போது கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ ஆறுகுட்டி ஓபிஎஸ் அணியில் இருந்தார். ஆனால் தற்போது ஆறுகுட்டி எம்எல்ஏ எடப்பாடி அணிக்கு மாறி அந்த அணியில் ஐக்கியமாகிவிட்டார்.
எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் அவரது முன்னிலையில் அந்த அணியில் இணைந்த ஆறுகுட்டியிடம் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை கோவை விமனநிலையத்தில் விஐபிகள் அமரும் லாஞ்சில் 15 நிமிடங்கள் நடந்ததாக தகவல்கள் வருகின்றன.
இந்த சந்திப்பின் போது ஓபிஎஸ் குறித்த பல ரகசிய தகவல்களை எடப்பாடி பழனிச்சாமி தெரிந்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி ஆறுகுட்டியிடம் ஒரு முக்கியமான வேலை ஒன்றை கொடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
அதாவது, ஓபிஎஸ் அணியில் உள்ள எம்எல்ஏக்களில் யாரெல்லாம் அதிருப்தியில் இருக்கிறார்களோ அவர்களிடம் பேசி அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து தங்கள் அணியில் இணைக்க வேண்டும் என்ற டாஸ்க் ஆறுகுட்டிக்கு எடப்பாடி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.