உதயநிதி அமைச்சரானால் தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடப்போகிறதா? எடப்பாடி பழனிசாமி

செவ்வாய், 13 டிசம்பர் 2022 (13:43 IST)
உதய நிதி அமைச்சர் ஆனால் தமிழ் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடப் போகிறதா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்
 
திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி ஏற்க இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி கூறியபோது ’முதலமைச்சர் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு முடிசூட்டு விழா நடைபெற இருக்கிறது என்றும் மிகப் பெரிய தியாகத்தைச் செய்தே நாட்டுக்கு உழைத்த மாமனிதன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நாளை முடிசூட்டு விழா நடைபெற இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார் 
 
கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அவருடைய மகன் அடுத்ததாக முதலமைச்சர் ஆனார் என்றும் தற்போது அவருக்கு அடுத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி முதலமைச்சராகக் கொண்டு வருவதற்கான முடிசூட்டுவிழா தான் இந்த அமைச்சர் பதவி என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
உதயநிதி அமைச்சர் ஆனால் தமிழ் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுகிறதா என்றும் ஏற்கனவே எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெற்று கொண்டிருக்கிறது என்றும் அவர் வந்தால் அந்த ஊழல் எல்லாம் தலைவராக செயல்படுவார் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்