சசிகலா விடுதலை எப்படி இருக்கும்... வாய் மலர்ந்த எடப்பாடியார்!!

வியாழன், 19 நவம்பர் 2020 (09:53 IST)
சசிகலா விடுதலை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பாரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிக்கலா கட்டவேண்டிய அபராத தொகையான ரூ.10.10 கோடி நேற்று செலுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது. அதை தொடர்ந்து அபராத தொகையை செலுத்தி விட்டதால் சசிகலா தண்டனை காலம் குறைக்கப்பட்டு விரைவில் விடுதலை செய்யப்படுவார் என பேசிக் கொள்ளப்பட்டது.
 
இந்நிலையில் இது குறித்து நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம்  கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வெளியில் வருவது கட்சியிலும் ஆட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என திட்டவட்டமாக தெரிவித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்