ப.சிதம்பரம் இந்த பூமிக்கு பாரம் – விளாசிய எடப்பாடி பழனிச்சாமி

செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (12:14 IST)
காவிரி டெல்டா பகுதிகளில் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. விழாவில் பங்கேற்று மலர் தூவி தண்ணீர் திறப்பை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

பிறகு பேசிய அவர் “இறைவன் அருளால் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அனை 120 அடியை எட்டும். தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் சேலம், நாமக்கல், ஈரோடு பகுதியை சேர்ந்த 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

நீர்வரத்தை பொறுத்து மேலும் தண்ணீர் திறந்துவிடப்படும். காவிரி நடியின் குறுக்கே மூன்று அணைகள் கட்டவும், பொதுப்பணி துறைக்கு சொந்தமான குளம், ஏரிகளை தூர்வாரவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று கூறினார்.

மத்திய அரசு தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்றினால் கூட அதிமுக கை கட்டி நிற்கும் என ப.சிதம்பரம் கூறியது பற்றி தனது கருத்தை கூறிய முதல்வர் “ப.சிதம்பரம் இவ்வளவு காலமாக மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார். அவரால் நாட்டுக்கோ, தமிழகத்துக்கோ என்ன பயன் கிடைத்தது. அவரால் பூமிக்குதான் பாரம்” என்று பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்