தேர்தல் அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு: எடப்பாடி பழனிசாமி புகார்!

திங்கள், 21 பிப்ரவரி 2022 (17:19 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்து தேர்தல் அலுவலர்களுக்கும் திமுகவினர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். 
 
முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அப்போது அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருந்தாலும், அவர்களை தோல்வி அடைந்தவர்கள் என அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு அனைத்து அலுவலர்களும் வாய்மொழி உத்தரவை திமுக பிறப்பித்திருக்கிறது என்று கூறியுள்ளார் 
 
மேலும் தேர்தல் நேரத்தில் குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டது திமுக என்றும் திமுக வெற்றி பெற்றால் அது உண்மையான வெற்றி ஆக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்