அதிமுகவுக்கு ஆதரவாக 123 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். ஆனால் கலைச்செல்வன், ரத்தினசபாபதி உள்ளிட்ட மூவரும் அதிமுக எதிர்ப்பு மனநிலையில் தான் உள்ளனர்.. மேலும் கருணாஸும் அதிமுக வுக்கு எதிரான மனநிலையில்தான் இருக்கிறார். அதனால் மொத்தமாக 119 பேர்தான் அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை. இதனால் இன்னும் சில எம்.எல்.ஏக்களை அதிமுகவில் இருந்து இழுக்க திமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
இதற்காக திமுக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட சில நிர்வாகிகள் ரகசியமாக சில அதிமுக எம்.எல்.ஏக்களிடம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. அதற்காக பெரியத் தொகை ஒன்று திமுக தரப்பில் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள எடப்பாடி பழனிச்சாமி வருமான வரித்துறையின் உதவியை நாடியுள்ளதாக தெரிகிறது. தேர்தல் நேரத்தில் திமுக வின் பணபுழக்கத்தைத் தடுக்க முன்பு ரெய்டுகளை நடத்தியது போல இப்போதும் ரெய்டுகள் நடத்தவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிகிறது. அதனால் விரைவில் திமுக உறுப்பினர்கள் சிலர் வீடுகளில் விரைவில் ரெய்டு நடக்கலாம் எனத் தெரிகிறது.