5 மணி நேரம் விசாரணை; அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து வெளியேறினார் பொன்முடி..!
வியாழன், 30 நவம்பர் 2023 (18:08 IST)
அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மணி நேர விசாரணைக்கு பின்னர் அமைச்சர் பொன்முடி வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு விசாரணையில் நவம்பர் 30ஆம் தேதி ஆஜராக வேண்டும் என அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சாமான் அனுப்பி இருந்தது.
இதனை அடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை அமைச்சர் பொன்முடி ஆஜரானார். சமீபத்தில் அமைச்சர் பொன்முடி வீட்டில் நடந்த சோதனையின் போது எடுக்கப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் 5 மணி நேர விசாரணைக்கு பின்னர் சற்றுமுன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து அமைச்சர் பொன்முடி வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து அமலாக்க துறையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விரைவில் தெரியவரும்.