இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது மனைவி மற்றும் மகன் உதயநிதி ஸ்டாலின் உடன் வந்து வாக்களித்தார். அவர் வாக்களித்துவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இது ஆளுங்கட்சிக்கு எதிரான தேர்தல் என்றும் மே இரண்டாம் தேதி மக்களின் தீர்ப்பு சிறப்பாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் தனக்கு வந்த தகவலின் படி அனைத்து தொகுதிகளிலும் அதிக அளவு வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும் இந்த தேர்தல் ஒரு மாற்றத்திற்கான தேர்தல் என்றும் அவர் தெரிவித்தார்