அஇஅதிமுக புரட்சி தலைவி அம்மா - ஓ.பி.எஸ் அணி கட்சிக்கு புதிய பெயர்

வியாழன், 23 மார்ச் 2017 (11:57 IST)
இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ் அணி மற்றும் சுதாகரன் அணி என இருவரும் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. மேலும், அஇஅதிமுக என்ற கட்சி பெயரையும் யாரும் பயன்படுத்தக்கூடாது எனவும் தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. 


 

 
எனவே, ஓ.பி.எஸ் அணியின் வேட்பாளர் மதுசூதனன் மின்கம்பம் சின்னத்திலும், தினகரன் தொப்பி சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள்.  முதலில் தினகரனுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த சின்னம் வேண்டாம் என தேர்தல் கமிஷனிடம் முறையிட்ட தினகரன் தரப்பு தங்களுக்கு தொப்பி சின்னம் வேண்டும் என கேட்டுப் பெற்றுக் கொண்டுள்ளது.
 
இந்நிலையில், ஓ.பி.எஸ் அணிக்கு அஇஅதிமுக புரட்சி தலைவி அம்மா எனவும், தினகரன் தரப்பிற்கு அஇஅதிமுக அம்மா என்ற பெயரை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்