மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு: புதிய நிபந்தனை

வியாழன், 17 பிப்ரவரி 2022 (07:40 IST)
வங்கி கணக்கு, பான் கார்டு ரேசன் அட்டை உள்பட அனைத்தையும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது மின் இணைப்பு எண்ணையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என கூறப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இலவச மற்றும் மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படும் நிலையில் அதில் முறைகேடு நடப்பதை தடுப்பதற்காக நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் திட்டமிட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
சுமார் 3,650  கோடி வரை இலவச மற்றும் மானிய விலையில் மின்சாரத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் எந்தவிதமான முறைகேடு நடக்காமல் இருப்பதற்காக மின் நுகர்வோரிடம் இருந்து ஆதார் எண் பெற்று அவர்களின் மின் இணைப்பு என்னுடன் இணைக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
இந்த முறை நடைமுறைக்கு வந்தால் இலவச மின்சாரம் பெறுபவர்கள் முறைகேடு செய்ய முடியாது என்று கூறப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்