தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம்!

வெள்ளி, 17 டிசம்பர் 2021 (10:47 IST)
உள்நாட்டு விமான பயணிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் புதிய கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

 
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது 77 நாடுகளுக்கு பரவி உள்ளது. குறிப்பாக இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், மேற்கு வங்காளம், தெலுங்கானா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் தொற்று பரவி அதிகமாக ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. 
 
இந்நிலையில் உள்நாட்டு விமான பயணிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அவை பின்வருமாறு... 
 
1. உள்நாட்டு பயணிகள் அனைவர்க்கும் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை, இ-பதிவு கட்டாயம் 
2. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு ஆன்லைன் பதிவு கட்டாயம்
3. கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு 2 டோஸ் தடுப்பூசி சான்று கட்டாயம் 
4. பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள், அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர். 
5. வெளிமாநில விமான பயணிகள் வீடுகளிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை
6. கோவை, சென்னைக்கு வரக்கூடிய அனைத்து பயணிகளும் கொரோனா தொற்று இல்லை என்று சான்று வைத்திருக்க வேண்டும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்