வர்தா புயல் காரணமாக சென்னையில் பல மணிநேரம் மின் தடை ஏற்படும்!!

திங்கள், 12 டிசம்பர் 2016 (10:32 IST)
வர்தா புயல் தீவிரமடைந்துள்ளதால் இன்று சென்னை மற்றும் வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. வர்தா புயல் ஆந்திரா, சென்னை இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பலந்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
வர்தா புயல் கரையை கடக்கும் நேரத்தில் சென்னையில் மின்சார தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வர்தா புயல் சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை இன்று மதியம் 12 மணிக்கு மேல் கரையை கடக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரையை கடந்த பின்னரும் 12 மணி நேரத்திற்கு பலத்த மழை இருக்கக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
வர்தா புயல் கரையை கடக்கும் நேரத்தில் மிகவும் பலத்த காற்று வீசும் என்பதால் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக குறைந்தது 6 மணி நேரம் மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்கம்பங்கள் முறியும் பட்சத்தில் மின்சார விநியோக தடை அதிகரிக்கக்கூடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்