சென்னைக்கும் பள்ளிகள் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

செவ்வாய், 2 நவம்பர் 2021 (08:18 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் காரணத்தினால் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்
 
குறிப்பாக இன்று ஐந்து மாவட்டங்களுக்கும் கொடைக்கானலில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தொடர் மழை காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். சென்னை போலவே செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே கடலூர் விழுப்புரம் அரியலூர் பெரம்பலூர் திருவண்ணாமலை மற்றும் கொடைக்கானல் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்