போன மாதம் ரூ.30, இன்று ரூ.5: முருகைக்காய் விலை கடும் சரிவு

வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (18:39 IST)
கடந்த மாதம் முருங்கைக்காய் விலை 30 ரூபாய் விற்பனையான நிலையில் தற்போது படிப்படியாக சரிந்து இன்று ஐந்து ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
முருங்கைக்காய் விலை வரலாறு காணாத வகையில் ஒரு முருங்கைக்காய் 30 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் பொதுமக்கள் முருங்கைக்காய் வாங்குவதையே மறந்துவிட்டனர் 
 
இந்த நிலையில் தற்போது விளைச்சல் அதிகம் காரணமாக காய்கறி சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து அதிகரித்து உள்ளது. இதனை அடுத்து 20 ரூபாய் பத்து ரூபாய் என விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் இன்று ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
முருங்கைக்காய் விலை குறைந்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்