மதுரையில் பிரபல டாக்டர் பி.சரவணன். தமிழக அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதே வேளையில், தமிழ் சினிமா மீதும் ஆர்வம் கொண்டு, ஒருசில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு மிக நெருக்கமாக இருந்த டாக்டர் சரவணன், முதலில் மதிமுகவில் இணைந்தார். அவருக்கு, மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாரத வகையில், கடந்த செப்டம்பர் மாதம் அக்கட்சியிலிருந்து திடீரென விலகி பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
ஆனால், அங்கும் நிலை கொள்ளாமல், திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இன்று ஆராவாரமாக இணைந்தார்.