இந்த நிலையில் தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட குற்றாலத்தில் பழைய குற்றாலம், தேனருவி, செண்பகாதேவி அருவி, மெயின் அருவி ஆகிய அருவிகள் இருக்கும் நிலையில் அந்த அருவிகளில் சீசன்களில் மட்டுமே தண்ணீர் வரும் என்றும் ஆனால் தான் புதிய அருவியை உருவாக்கி வருடம் முழுவதும் குற்றாலத்தில் தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்வேன் என்றும் கூறியுள்ளார்
இதனால் வருடம் முழுவதும் சீசன் இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்றும் அந்த பகுதியில் உள்ள வணிகம் மேம்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குற்றாலத்தை உலகத்தரம் மிக்க சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு பேரூராட்சி நிர்வாகத்தால் முடியாது என்றும் நான் வெற்றி பெற்று எம்.பி ஆனால் உலக சுற்றுலா வரைபடத்தில் குற்றாலம் இணையும் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பிரச்சாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.