தண்ணீரில் மூழ்கிய வாகனங்களை இயக்க வேண்டாம்: போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தல்..!

புதன், 20 டிசம்பர் 2023 (11:52 IST)
சமீபத்தில் பெய்த கன மழையால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளான நிலையில் ஏராளமான வாகனங்கள் பழுதுபட்டுள்ளன. பல வாகனங்கள் நீரில் முழுமையாக முழுகிவிட்டதால் தற்போது பழுதில் இருப்பதாகவும் அதை சரி செய்யும் முயற்சியில் பொதுமக்கள் இருப்பதாகவும் தெரிகிறது. 
 
இந்த நிலையில் மாநில போக்குவரத்து ஆணையர் ஒரு முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:  நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தண்ணீரில் மூழ்கிய வாகனங்களை இயக்க வேண்டாம். மற்ற வாகனத்தின் உதவியுடன் பாதிக்கப்பட்ட வாகனத்தை சேவை மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்
 
தென் மாவட்டங்களில் உள்ள அனைத்து வாகன விற்பனையாளர்களும் சிறப்பு முகாம் அமைத்து வாகனங்களை சரி செய்யவும், மையங்களுக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் விண்ணப்பிக்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தனியாக சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும் என மாநில போக்குவரத்து ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்