கோவை மாவட்டம் துடியலூர், காரமடை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் கழுதைகளுடன் அதன் உரிமையாளர்கள் தெருக்களில் சுற்றி வருகிறார்கள்.
அவர்கள், "கழுதைபால் வாங்கலியோ கழுதைப்பாலு" என்று கூவியபடி தெருக்களில் சுற்றும் அவர்களின் குரல் கேட்டு வருபவர்களுக்கு, அவர்கள் கண் முன்பே கழுதைகளை நிறுத்தி அவற்றில் இருந்து பாலை கறந்து விற்பனை செய்கிறார்கள்.
கழுதை பால் மருத்துவ குணம் கொண்டது என்றும், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும் என்றும், மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, உடல் சூட்டை குறைக்கும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.