நாய்க்கு தவறான சிகிச்சை? மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்நிலையத்தில் புகார்

செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (19:59 IST)
அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நாய்கள் இறந்தபோனதை அடுத்து உரிமையாளர் காவல்நிலையத்தில், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

 
சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த தம்பதி 8 வருடங்களாக பாப்பு என்ற நாய் ஒன்றை குட்டியில் இருந்து வளர்த்து வந்தனர். அந்த பாப்பு என்ற குட்டி ஈன்றபோது 1 குட்டியை தங்களுடன் வைத்துக்கொண்டனர். அதற்கு புஜ்ஜி என்று செல்லமாக பெயரிட்டனர்.
 
பாப்பு, புஜ்ஜி இரண்டையும் தங்களது குழந்தைகள் போல் செல்லமாக பாசமாக வளர்த்து வந்தனர். இரண்டுக்கும் திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாப்பு, புஜ்ஜி இரண்டையும் சைதாப்பேட்டை அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
 
அங்கு இரு நாய்களுக்கு மருத்துவர் ஊசி போட்டுள்ளார். சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின் இரண்டு நாய்களும் ஒன்றின் பின் ஒன்றாக உயிரிழந்துள்ளது. இதனால் அந்த தம்பதி கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இந்நிலையில் இந்த தம்பதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், மருத்துவர் அளித்த சிகிச்சை மீது சந்தேகம் இருக்கின்றது. அதனால் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
 
இவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் புதைக்கப்பட்ட நாய்கள் தோண்டி எடுக்கப்பட்டு வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்