திமுக-காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா? - ப.சிதம்பரம் பதில்

ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2016 (11:32 IST)
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கலந்துகொண்டார்.


 


அப்போது பேசிய அவர், அரசின் புதிய திட்டங்கள் மக்களை சென்றடைந்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருப்பதாகக் கூறினார்.

மேலும், சட்டப்பேரவையில் ஆரோக்கியமான விவாதங்கள் எதுவும் நடக்கவில்லை என குற்றம்சாட்டினார். ​ உள்ளாட்சித் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி நீடிப்பது சந்தேகம் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், எப்போது தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்களை  அவர் கேட்டுக் கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்