ஆனால் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் பழைய தெம்புடன் வருவாரா என்ற சந்தேகம் பலரிடமும் உள்ளது. அவருக்கு எழுந்து உட்காருவதற்கு, நடப்பதற்கு, எழுதுவதற்கு என பயிற்சிகள் அளிக்கப்படுவதாக செய்திகள் வருவது இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு தன்னால் முடிந்த வரை சிகிச்சை அளித்து விட்டதாகவும், இதற்கு மேல் அவரது உடல் நிலையை வலுப்படுத்த வேண்டுமானால் லண்டனில் உள்ள மருத்துவமனையில் அழைத்து செல்ல வேண்டும். அங்கு மேலும் பல வசதிகள் உள்ளன அதன் மூலம் முதல்வருக்கு நல்ல சிகிச்சை அளிக்க முடியும் என டாக்டர் ரிச்சார்ட் ஜான் பீலே கூறிவிட்டு சென்றதாக தகவல்கள் வருகின்றன.