விஜய் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கும் படம் பெயர் தெரியுமா?

புதன், 24 ஆகஸ்ட் 2016 (14:10 IST)
கபாலி படத்திற்கு பின், பா. ரஞ்சித், நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியது.


 


மேலும், அப்படத்தின் கதை, வட சென்னை பாக்சிங் செய்யும் மனிதர்களை பற்றியது, அதனால், இந்த படத்திற்காக சூர்யா பாக்சிங் கற்க போகிறார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில், பா.ரஞ்சித்தின் கதையில் சூர்யா சில மாற்றங்கள் செய்ய சொன்னதால், ரஞ்சித்திற்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அப்படத்தை ரஞ்சித் ட்ராப் செய்துள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், ரஞ்சித் தனது அடுத்த படத்தை நடிகர் இளையதளபதி விஜய்யை வைத்து, இயக்குவதாக செய்திகள் வெளீயாகியது. தற்போது, விஜய் நடிப்பில் ரஞ்சித் இயக்கும் படத்தின் பெயரும் கசிந்துள்ளது. அப்படத்திற்கு ‘சார்பட்டா பரம்பரை’ என்று ரஞ்சித் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்