’திமுக கூட்டணி ஒன்றுக்கும் உதவாத உருப்படாத கூட்டணி ’- ராஜேந்திர பாலாஜி ஆவேசம்

வியாழன், 28 பிப்ரவரி 2019 (12:30 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தேசிய கட்சிகளும், தமிழக கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு வார்த்தைகளை, பொதுமக்களிடம் அள்ளி வீசி, அதைப் பிரசார ஆயுதமாகப் பிரயோகித்து வருகின்றனர்.
சமீபத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, என்.ஆர்.காங்கிரஸ் போன்ற கட்சிகள் இணைந்தன. இதை மெகா கூட்டணி என்று அழைத்தனர்.
 
இதற்கு எதிராக திமுகவும் கங்கிரஸ், கொமதேக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்  ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து அதிமுகவுக்கு கடும் சவால் கொடுத்தது.
 
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம்  சிவகாசியில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:
 
அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாஜக, பாமக, என்.ஆர்.காங்கிரஸ் என்பது மங்கலகரமான கூட்டணி. ஆனால் திமுக கூட்டணி  உருப்படாத கூட்டணி. மங்கிப்போன கூட்டணி , ஒன்னத்துக்கும் உதவாத கூட்டணி என்று பேசினார்.
 
மேலும் இந்திய இறையாண்மையை கட்டிக்காப்பது பாஜக, அதிமுக,பாமக, ஆகியவை தான்...இவ்வாறு அவர் பேசினார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்