திமுக கட்சியின் தொண்டர்கள் தலைமை மீது அதிருப்தி

செவ்வாய், 16 மார்ச் 2021 (23:27 IST)
திமுக கட்சியை பொறுத்தவரை தொண்டர்கள் தலைமை மீது அதிர்ப்தி மற்றொன்று உண்மையான தொண்டர்கள் மத்தியில் கலப்பிடமான திமுக வினர் அதிகமாகி விட்டனர் என்றும் தமிழக அளவில் திமுக ஜெயிக்க வாய்ப்பில்லை என்றும் கரூர் அருகே அரவக்குறிச்சி பாஜக வேட்பாளரும், பாஜக மாநிலத்துணை தலைவருமான அண்ணாமலை அதிரடி பேட்டியளித்தார்.
 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சி பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியான அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக வேட்பாளர் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளரும், பாஜக மாநில துணை தலைவருமான அண்ணாமலையை ஆதரித்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதோடு, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு வாக்குகள் சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக கழக கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் மு.தம்பித்துரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சார்ந்த பல்வேறு கட்சிகளின் பிரநிதிகளும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளரும், பாஜக மாநில துணை தலைவருமான அண்ணாமலை அவர்கள் பேசிய போது, திமுக கட்சியினை பொறுத்தவரை ஏற்கனவே இருந்த எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி மீது இத்தொகுதி மக்கள் அதிர்ப்தியில் உள்ளனர். திமுக தொண்டர்கள் தலைமை மீது அதிர்ப்தி ஒருபுறம் என்றும் உண்மையான திமுக தொண்டர்கள் மத்தியில் கலப்பின திமுக வினர் சென்று அக்கட்சியினை உடைத்து விடுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஒரு சில மாதங்களில் அரவக்குறிச்சி தொகுதியில் தான் வெற்றி பெற்று பாரத பிரதமர் மோடி அவர்களை வரவழைத்து மிகப்பிரமாண்டமான திட்டங்களை துவக்க உள்ளதாகவும், இஸ்லாமியர்கள் யாரும் பாஜக விற்கு எதிரியல்ல என்பதனை இங்குள்ள வந்திருந்தவர்களை பார்த்தாலே தெரியும் என்றார். மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு தொழில்களை தமிழகத்தில் கொண்டு வர உள்ளதாகவும், மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வர் ஆவது உறுதி என்றும் அவர் தெரிவித்தார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்