தலைநகரை தனதாக்கியது திமுக!

வியாழன், 19 மே 2016 (13:25 IST)
சென்னை திமுகவின் கோட்டை என்பார்கள். அந்த அளவிற்கு  திமுக சென்னையில் பரவலாக செல்வாக்கை கொண்ட கட்சி. ஆனால் கடந்த திமுக ஆட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக திமுக தனது கோட்டையான சென்னையில் பலத்த அடிவாங்கியது.


 
 
இந்நிலையில் சென்னையை மீண்டும் திமுக தனது வசமாக்கியுள்ளது இந்த தேர்தலின் மூலம். சென்னையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட அதிருப்தியை அதிமுக சென்னையில் அறுவடை செய்துள்ளது. இதன் மூலம் திமுக தனது செல்வாக்கை மீட்டெடுத்துள்ளது.
 
சென்னையில் மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் திமுக 11 தொகுதிகளிலும், ஆளும் அதிமுக 5 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. அதிமுகவுக்கு தலைநகரான சென்னையில் இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
 
சென்னையில் போட்டியிட்ட அதிமுக பெண் அமைச்சர்களாக வளர்மதி மற்றும் கோகுல இந்திரா ஆகியோரும் பின்னடைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்

வெப்துனியாவைப் படிக்கவும்