டாக்டர் ராமதாஸுக்கு 48 மணி நேரம் அவகாசம் கொடுத்த திமுக!

வெள்ளி, 22 நவம்பர் 2019 (20:03 IST)
முரசொலி நில விவகாரத்தில் 48 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீது ரூபாய் ஒரு கோடி கோரி அவதூறு வழக்கு தொடரப்படும் என திமுக தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
முரசொலி நிலம் பஞ்சமி நிலம் என்று சமீபத்தில் டாக்டர் ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை கூறினார். மேலும் முடிந்தால் மூலப்பத்திரத்தை எடுத்து காண்பிக்கட்டும் என்று அவர் சவால் விட்டார். இந்த நிலையில் டாக்டர் ராமதாசின் சவாலை ஏற்று இன்னும் திமுகவினர் மூல பத்திரத்தை எடுத்து காண்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முரசொலி நிலம் குறித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது அரசு தரப்பில் அவகாசம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது திமுகவின் சார்பில் ஆஜரான ஆர் எஸ் பாரதி அவர்கள் டாக்டர் ராமதாஸ் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று கூறினார்.
 
இந்த நிலையில் தற்போது முரசொலி நில விவகாரம் குறித்து டாக்டர் ராமதாஸ் மற்றும் பாஜகவின் ஸ்ரீனிவாசன் மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாக திமுகவின் ஆர்எஸ் பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்
 
அந்த நோட்டீஸில் 48 மணி நேரத்திற்குள் முரசொலி குறித்து கூறிய கருத்துக்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவ்வாறு கேட்காவிட்டாலும் ரூபாய் ஒரு கோடி கோரி அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் டாக்டர் ராம்தாஸ் மற்றும் பாஜகவின் சீனிவாசன் ஆகிய இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
 
இந்த நோட்டீசுக்கு ராம்தாஸ் மற்றும் சீனிவாசன் என்ன பதில் அளிப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்