குறிப்பாக தமிழகத்தில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகள் கேட்பதாக சொல்லப்படும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஐந்து தொகுதிகள் வரை கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல் இடதுசாரி கட்சிகளும், மதிமுகவும் மூன்று அல்லது நான்கு தொகுதிகள் வரை கேட்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் கூட்டணி கட்சிகளுடன் திமுக நடத்தி வரும் பேச்சு வார்த்தையில் இழுபறி நீடிக்கும் என தெரிகிறது.
அதேசமயம் வருகிற மக்களவைத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் உள்ளதாகவும், கேட்கும் தொகுதிகளை திமுக ஒதுக்காவிட்டால் திமுக கூட்டணி உடையும் நிலை உருவாகும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.