திமுக கட்சி நிர்வாகிகளை நியமிப்பதற்கான 15வது பொதுத்தேர்தலை திமுக தலைமை அறிவித்துள்ளது. அதில் முதற்கட்டமாக பேரூராட்சி, நகரங்களுக்கு ஏப்ரல் 28ம் தேதி தேர்தல் நடத்தி முடிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பங்களை ஏப்ரல் 23ம் தேதிக்குள் தலைமை கழக பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
அதேபோல மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு கழக தேர்தல் மே 1ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் 29ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கட்சியில் அதிகாரம் உள்ள பதவி வட்ட செயலாளர் பதவி என்பதால் அப்பதவிக்கு பல இடங்களில் போட்டி பலமாக உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.