ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள், மு.க.ஸ்டாலின், திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் கோரிக்கை வைத்தனர். ஆனால், அதை சபாநாயகர் ஏற்கவில்லை.மற்றொரு நாளில், குறைந்த பட்சம் ஒரு வாரம் கழித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். எதிர்கட்சிகளின் இந்த கோரிக்கை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது.
நன்றி: புதிய தலைமுறை
ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே சபாநாயகர் செயல்படுவதாக கூறி, திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் சபாநாயகரின் இருக்கை முன்பு சென்று அமளியில் ஈடுபட்டனர். அதில் சபாநாயகர் தனபாலின் இருக்கை மற்றும் மைக் போன்றவற்றை அவர்கள் உடைத்தனர்.
இது தொடர்பாக ஒரு வீடியோவை ஜெயா தொலைக்காட்சி வெளியிட்டது. வழக்கம் போல் அதில சில கட்டிங், ஒட்டிங் வேலையை செய்துள்ளது. அதிமுகவினர் பேசியதை காட்டாமல், விஜயகாந்த் நாக்கை கடித்ததை மட்டும் ஒளிபரப்பியது போல் தற்போது, திமுக எம்.எல்.ஏக்களின் நடவடிக்கைகளை மட்டும் ஜெயா தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.