உதயநிதிக்கு அமைச்சர் பதவி? திமுகவினர் தீர்மானம்!

திங்கள், 30 மே 2022 (13:36 IST)
உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று திருச்சியில் திமுகவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

 
கடந்த ஏப்ரல் மாதல் தமிழகத்தில் தேர்தல் நடந்தது. இதில், ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மையை இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. ஸ்டாலின் முதல்வர் பொறுபேற்று ஆட்சி நடத்தி வருகிறார். எதிர்க்கட்சியான அதிமுக ஆளும் திமுக அரசின் மீது விமர்சனங்களும் குற்றச்சாட்டும் கூறி வருகின்றனர். இருப்பினும் முதல்வர் ஸ்டாலின் தனது செயல்பாட்டை தொடர்ந்து செய்து வருகிறார்.
 
இந்நிலையில், எம்.எல்.ஏ உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென  அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னரே தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து தற்போது திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று திருச்சியில் திமுகவினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
 
திமுக திருச்சி தெற்கு மாவட்டக் செயற் குழுக் கூட்டம் அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை அமைச்சரும் தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்தார். திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ், முன்னாள் எம்.எல்.ஏ கே.என்.சேகரன் மற்றும் மாநில, மாவட்டக் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது கூசுதல் தகவல். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்