இந்த நிலையில் திமுகவினர்களை குறிவைத்து ஐடி ரெய்டு நடத்துவது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் திமுகவை ஐடி ரெய்டு கொண்டு மிரட்டலாம் என மத்திய அரசு நினைத்தால் அதைவிட அரசியல் அப்பாவித்தனம் வேறொன்றுமில்லை என்று கூறினார். மேலும் ஐடி ரெய்டு போன்ற பூச்சாண்டிக்கு பயப்படும் இயக்கம் திமுக அல்ல என்றும் இதை போன்ற பல பிரச்சனைகளை திமுக சந்தித்து உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்