இந்நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்ததை அடுத்து அவர் தரப்பில் இந்த வாக்கை விசாரிக்கும் படி கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கி இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி இந்த வழக்கு விசாரணைக்கு வந்து ஓபிஎஸ்-க்கு எதிராக தீர்ப்பு வந்தாலும் இந்த தீர்பினால் திமுகவிற்கு எந்த லாபமும் இல்லை. ஆம், 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் ஆட்சிக்கு உடனே ஆபத்து இல்லை.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். இடைத்தேர்தலில் திமுக பெருவாரியான தொகுதியை கைப்பற்றும் என்றாலும், இந்த வழக்கு முடிவடைந்து தேர்தல் கமிஷன் இடைத்தேர்தல் அறிவிப்பதற்குள் பொதுத்தேர்தலே வந்துவிடும்.